டிரெண்டிங்
விஜய் குறித்த விமர்சனம்.. வேல்முருகனை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்குக.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
விஜய் நிகழ்ச்சியை விமர்சித்து பேசிய வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்க சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது. விஜய் குறித்த வேல்முருகனின் விமர்சனத்தை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை அக்கட்சி முன்வைத்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து களமாடி வருகிறார். தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள சூழலில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் விஜய் பள்ளி பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களை நேரில் சந்தித்து கவுரவித்து வருகிறார். இந்தாண்டும் அத்தகைய கல்வி விருது விழாவை விஜய் நடத்தி வரும் நிலையில், அதை தவாக கட்சியின் தலைவரும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் விமர்சித்து பேசிய கருத்துக்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு விஜயின் தவெக நிர்வாகிகள் மட்டுமல்லாது, பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜய் கட்சிக்கு ஆதரவு நிலையில் இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியும் வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேல்முருகனை எம்எல்ஏ பதவில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ செல்வங்களை நேரில் சந்தித்து கெளரவப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ செல்வங்கள் அவர்களது பெற்றோர்களை கொச்சைப்படுத்தி வேல்முருகன் பேசியிருப்பது. அவர் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.
இதுபோன்ற நபர்கள் இனியும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வு நீண்டநொடிய பாரம்பரியம் கொண்ட சட்ட பேரவைக்கு கருப்புள்ளியாக அமைந்துவிடும். ஆகவே வேல்முருகனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kannan V author
ஹாய், என் பெயர் கண்ணன்.. எழுத்து, ஊடகத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் கடந்த 6 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கி வருகிறேன். அரசியல் / உலகம் / விளையாட்டு கு...மேலும் பார்க்க
முடிந்தது
Subscribe to our daily Newsletter!
சமீபத்திய செய்தி
புதுச்சேரி மின்துறை இளநிலை பொறியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
புதுச்சேரியில் இன்று மின் தடை அறிவிப்பு.. முழு விவரம் இதோ
ஆனி மாத ராசிபலன் 2025: பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலை மாற்றம் யாருக்கு?
தமிழ் நாள்காட்டி 2025 - ஜூன் 12ம் தேதி வியாழக்கிழமை இன்றைய நல்ல நேரம், ராகு காலம், முகூர்த்தம், பஞ்சாங்கம்
Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (12 ஜூன், 2025) மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும்?