Times Now Digital, Rakesh
Jun 08, 2025
கேரளா சினிமாவில் வெளியான பலருக்கும் தெரியாத விறுவிறுப்பான ஒரு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Credit: Times Now Digital
கேரளா சினிமாவில் 2024-ம் ஆண்டு துர்கா கிருஷ்ணா, ஷைன் டோம் சாக்கோ, ஸ்வாசிகா, ஷிவடா, அனுமோல் நடிப்பில் வெளிவந்த விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் Oru Anweshanathinte Thudakkam.
Credit: Times Now Digital
கேரளாவில் ஒரு பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவருக்கு என்ன ஆனது? அவரை சுற்றிய மர்ம முடிச்சுகள் என்ன என்பதை பெண் போலீஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் மையக்கரு.
Credit: Times Now Digital
ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் பெண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சமீபத்தில் வேறெந்த படமும் வந்ததில்லை. அந்தளவு இப்படத்தில் பெண்களுக்கு வலுவான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.
Credit: Times Now Digital
அந்த வகையில் இப்படத்தை கண்ணூர் ஸ்குவாட் படத்தின் பெண் வெர்ஷன் என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட கதைக்களம், காட்சிகள் எல்லாமே கண்ணூர் ஸ்குவாட் படத்தை ஒட்டியே இருக்கும்.
Credit: Times Now Digital
இந்த படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதை தான். ஆறு மாதத்துக்கு முன்பு காணாமல் போனவரை தேடும் பயணத்தில், யூகிக்க முடியாத வகையில் அங்கங்கே டிவிஸ்ட் வைத்து ஆச்சரியப்படுத்தி இருப்பார்கள்.
Credit: Times Now Digital
எதிர்பாராத டிவிஸ்டுடன் சேர்ந்து ஒரு வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ள இந்த படத்தை தவறாமல் பார்த்து விடுங்கள்.
Credit: Times Now Digital
Thanks For Reading!