விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன எழுத்துக்களில் பெயர் வைக்கலாம்? Vaikasi Visagam 2025

Visagam Star Baby Names in Tamil: விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம், என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்று பார்க்கலாம்.

VIsagam Star Baby Names in Tamil
விசாக நட்சத்திரம் முருகப்பெருமான் அவதரித்த, மிகவும் விசேஷமான, குருவருள் கொண்ட நட்சத்திரங்களில் ஒன்றாகும். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், முழு பௌர்ணமி நாளில் தான் முருகப்பெருமான், ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தார். விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம், என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்று பார்க்கலாம்.
விசாக நட்சத்திரம் - துலாம் மற்றும் விருச்சிகம் ராசி
விசாக நட்சத்திரம், குரு பகவானின் நட்சத்திரமாகும். இதன் முதல் மூன்று பாதங்கள், சுக்ரன் ஆளும் ராசியான துலாம் ராசியிலும், நான்காவது பாதம், செவ்வாய் ஆளும் ராசியான விருச்சிகம் ராசியிலும் வரும். முருகப்பெருமானின் நட்சத்திரம் என்பதால், விசாக நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு இயல்பாகவே குருவருள் உள்ளது. துலாம் ராசியில் பிறந்தால், சுக்ரனின் ஆதிக்கமும், விருச்சிக ராசியில் பிறந்தால் செவ்வாய் ஆதிக்கமும் நிறைந்திருக்கும்.
விசாகம் நட்சத்திர குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
  • முருகப்பெருமானின் நட்சத்திரம் என்பதால், முருகனுடைய பெயர்களை வைக்கலாம்.
  • துலாம் ராசியில் பிறந்தால், சுக்ரனின் அதி தேவதையான மகாலக்ஷ்மியின் பெயர்களை, அதிர்ஷ்டம் என்பதை குறிக்கும் பெயர்களை வைக்கலாம்.
  • குருவின் நட்சத்திரம் என்பதால், குரு, சூரியன் போன்ற அர்த்தம் வரும் பெயர்களை வைப்பதும் உகந்தது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தி, து, தே, தோ ஆகிய எழுத்துக்கள் முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைக்கலாம். (ஆங்கில எழுத்துக்களில், Thi, Thu, Thy or tho)
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்
தி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்: தினேஷ், தினகரன், தினகர், திவாகர், திலீப், திவாகரன், திருச்செல்வன், திருமாறன், தீரன்,
து வரிசை ஆண் குழந்தை பெயர்கள்: துருவன், துருவ், துர்கேஷ், துரைவேல்
தே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்: தேவ், தேவா, தேவன். தேவேந்திரன், தேவ பிரகாஷ், தேவ பிரசாத்
தோ வரிசையில் ஆண் குழந்தைக்கான பெயர்கள் இல்லை
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்
தி வரிசை பெண் குழந்தை பெயர்கள்: திவ்யா, தியா, திஷா, தினுஷா, திலகா, திஷா, திவ்யான்ஷி, தீட்சண்யா
து வரிசை பெண் குழந்தை பெயர்கள்: துளசி, துலிகா, துர்கா, துர்கேஷ்வரி
தே வரிசை பெண் குழந்தை பெயர்கள்: தேவி, தேஜா ஸ்ரீ, தேஜஸ்வினி, தேவிகா, தேவயாணி, தேவிபிரியா, தேவ்யான்ஷி
தோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்: தோஷிகா, தோஷினி
    Sayee Balaji author

    வணக்கம். என் பெயர் சாயி பிரியதர்ஷினி. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக ஆங்கிலத்தில் ...மேலும் பார்க்க

    முடிந்தது
    Follow Us:
    End of Feed