Kitchen Vastu Tips: இந்த 7 விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள், வீட்டின் அமைதி கெடும்!

சமையலறை வீட்டின் ஆன்மா என்று சொல்லப்படுகிறது. சமையலறையின் தூய்மை முழு குடும்பத்தின் ஆரோக்கியம், மனநிலை மற்றும் நிதி நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. எனவே, சமையலறையில் சில தவறுகளை, நீங்கள் தவறுதலாக கூட செய்யக்கூடாது.

01 / 08
Share

சமையலறைக்கான வாஸ்து குறிப்புக்கள்

சமையலறை என்பது உணவு சமைப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல், லட்சுமி தேவியின் வசிப்பிடமாகவும் கருதப்படுகிறது. அதே போல, குடும்பத்தின் ஆரோக்கியமாகவும் கருதப்படுகிறது. எனவே, சமையலறையின் தூய்மை, ஆற்றல் போன்றவை குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நேரடியாக தொடர்புடையவை. சமையலறை தொடர்பான சில சிறப்பு விஷயங்கள் வேதங்களிலும் வாஸ்து சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. வாஸ்து படி சமையலறையில் என்னென்ன தவறுகளை நீக்க வேண்டும்?

02 / 08
Share

சிலந்தி வலை, குவிந்திருக்கும் குப்பைகள்

சிலந்தி வலைகளும், மூலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளும் வறுமையின் தாயகமாகும். இது எதிர்மறை சக்தியை அழைப்பது மட்டுமல்லாமல், ஆரோகியத்தையும் பாதிக்கும்.

03 / 08
Share

காலியான டப்பாக்கள் அல்லது உடைந்த பாத்திரங்கள்

சமையலறையில் காலியான டப்பாக்கள், உடைந்த தட்டுகள், கிண்ணங்கள், அல்லது கண்ணாடிகளை வைத்திருப்பது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். இவை எதிர்மறையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

04 / 08
Share

தூய்மை!

சமையலறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, தூய்மையாக இருப்பது மிக மிக அவசியம்.

05 / 08
Share

சமையலறையில் பூஜை அறை

ஒரு சிலர், இடப்பற்றாக்குறை காரணமாக, சமையலறையில் கடவுள் சிலை அல்லது பூஜை அறையை வைத்திருப்பார்கள். இது வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. சமையலறைக்கு பதிலாக வேறு இடத்தில் பூஜை அறை அல்லது மண்டபத்தை வைக்கலாம். சமையலறையில் நெருப்பு அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது, என்பதால் வழிபாடு, பூஜைகள் பாதிக்கலாம்.

06 / 08
Share

இரவில் சின்க்கில் பாத்திரங்கள் இருப்பது

பலர் இரவு உணவிற்குப் பிறகு பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பதிலாக காலை வரை அவற்றை வைத்துவிட்டுச் செல்கிறார்கள். அழுக்குப் பாத்திரங்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரித்து வறுமையை ஏற்படுத்தும். தண்ணீரில் ஊறும் பாத்திரங்களால், நோய்த்தொற்று உண்டாகலாம். காலையில் எழுந்தவுடன் கழுவாத பாத்திரங்களைப் பார்ப்பது எரிச்சலை உண்டாக்கி, அந்த நாள் முழுவதும் பாதிக்கலாம்.

07 / 08
Share

உப்பு, மாவு, அரிசி தரையில் கொட்டுவது

சமையலறையில் உப்பு, மாவு அல்லது அரிசி போன்றவை தரையில் விழுந்தால், அதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அது உணவை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.

08 / 08
Share

துறப்பு

Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

next story