Jun 09, 2025
Times Now Digital, Sayee Balajiபுதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்று, மஞ்சள் நிற கட்டிடங்கள், பிரென்ச் காலனி பகுதி முழுவதும் காணப்படும்.
Credit: Times Now Digital
முண்டாசுக் கவி பாரதியார், பல ஆண்டுகள் வாழ்ந்த இடம் புதுவையாகும். புதுச்சேரியில் உள்ள மஞ்சள் நிற கட்டிடங்களில் ஒன்றில் பாரதியார் பத்து ஆண்டுகள் வசித்தார்.
Credit: Times Now Digital
சுப்ரமணிய பாரதியார் வசித்த, ரசித்து வாழ்ந்த, புதுச்சேரி இல்லம் இப்போது எப்படி இருக்கிறது?
Credit: Times Now Digital
புதுவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ளது மகாகவி பாரதியார் வசித்த வீடு. அந்த இல்லத்தை, புதுவை அரசு, நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு இல்லமாக மாற்றியுள்ளது.
Credit: Times Now Digital
புதுச்சேரியின் மிகப் பழமையான கட்டடங்களில் ஒன்றான பாரதி இல்லம், பல ஆண்டுகள் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டு, 2016ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
Credit: Times Now Digital
பாரதியார் அருங்காட்சியகத்தின் முகப்பு ஃபிரென்ச் சாயல் கொண்ட மஞ்சள் நிற கட்டிடக்கலையை பிரதிபலிக்கும். உட்புறத்தில், டைல்ஸ், சுண்ணாம்புக் காரை மற்றும் அலங்காரம் ஆகியவை தமிழர் கட்டிடக்கலை அமைப்பை பறைசாற்றுகிறது.
Credit: Times Now Digital
பாரதியாரின் பிரத்யேகமான கையெழுத்துப் பிரதிகள், மகாகவி பயன்படுத்திய அரிய பொருட்கள், மகாகவியின் புகைப்படங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
Credit: Times Now Digital
பாரதியார் அருங்காட்சியகம் என்றால் புத்தகங்கள் இல்லாமலா? பாரதியின் விசேஷமான கையெழுத்துப் பிரதிஎ கிட்டத்தட்ட 3000 நூல்களும், பல ஆயிரக்கணக்கான புத்தகங்களும் கொண்ட விசேஷ நூலகம் உள்ளது.
Credit: Times Now Digital
Thanks For Reading!