கோடை விடுமுறை முடிஞ்சா என்ன? கேரளாவில் இந்த 7 இடங்களுக்கு எப்போ வேணாலும் போகலாம்!

கோடை காலத்தில் மட்டும் தான் சுற்றுலா செல்ல வேண்டுமா என்ன? எப்போது வேண்டுமானாலும், சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் ஒன்று கேரள தேசம். கேரளாவில் நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய 7 இடங்கள் பட்டியல்!

01 / 09
Share

அழகிய கேரளாவில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்!

கோடை விடுமுறை முடிந்து விட்டது. இருப்பினும், அவ்வபோது சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் பட்டியலில் கண்டிப்பாக கேரளா இடம்பெறும்.

02 / 09
Share

கேரளாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. கோடை விடுமுறைக்கு மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் தான் அழகிய தேசம் கேரளா. கேரளாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

03 / 09
Share

திருச்சூர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். இந்தியாவின் நயாகரா என்று அறியப்படும் அதிரப்பள்ளி, ஜூன், ஜூலை மாதம், மழைகாலத்தில் பார்க்க ஏற்ற இடமாகும்.

04 / 09
Share

ரம்மியமான கடற்கரை கோவளம்

கேரளாவின் உள்ள அழகான, அமைதியான கடற்கரை நகரங்களில் ஒன்று கோவளம். அமைதியான கடற்கரைகள், ஆயுர்வேத ரிசார்ட்டுகள் மற்றும் கலங்கரை விளக்கங்களுக்கும் கோவளம் புகழ் பெற்றது.

05 / 09
Share

குமரகம்

கேரளாவின் அழகான வனப்பகுதி, பரந்து விரிந்திருக்கும் வேம்பநாடு ஏரியில் படகு சவாரி, பறவைகள் சரணாலயம், அருவிகள் என்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

Related stories

06 / 09
Share

கடற்கரை காதலர்களின் சொர்க்கம்

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள வர்கலா, கடற்கரை பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும். அமைதியான ரம்மியமான கடற்கரை, கலங்கரை விளக்கங்கள் மற்றும் கஃபேக்கள் நிறைந்த வர்கலா!

07 / 09
Share

வயநாடு!

கேரளாவின் பிரமிக்க வைக்கும் இடங்களில் ஒன்று வயநாடு. அடர் வனங்கள், ஏரளாமான அருவிகள், அமைதியான சூழல் என்று கேரளாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

08 / 09
Share

தேக்கடி!

கேரளாவில் ஆண்டு முழுவதும் செல்லக்கூடிய அழகான இடங்களில் ஒன்று தேக்கடி. போட்டிங், வனவிலங்கு சரணாலயம, மூங்கில் படகு சவாரி போன்றவை போன்றவை தேக்கடியின் சிறப்புகளாகும்.

09 / 09
Share

கொச்சின்!

கேரளாவின் துறைமுக நகரமான கொச்சின், வரலாற்று சிறப்புமிக்கது. டச்சு, போர்த்துகீசியம் மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை நிறைந்த கொச்சி பகுதி, வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தைத் தரும்.

next story