தென்னிந்தியாவின் முக்கிய இடங்களை வானில் இருந்து ரசிக்க வாய்ப்பளிக்கும் ஸ்பாட்கள் இதோ!
எல்லா இடங்களையும் நிலத்தில் இருந்து தான் ரசித்திருப்போம். ஆனால் அதே இடங்களை வேறு ஒரு கழுகு பார்வையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் . . சிலிர்க்கிறது தானே ? அப்படியான அனுபவத்தை பெறக்கூடிய இடங்களை சொல்கிறோம். தொடர்ந்து படியுங்கள்
ஹெலிகாப்டர் சுற்றுலா
தென் இந்தியாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைகள் தற்போது மெதுவாக வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலைப்பாங்கான இடங்கள், முக்கிய கோயில்கள் மற்றும் கடற்கரை அழகுகளை மேலிருந்து காணும் வாய்ப்பை இந்த சேவைகள் வழங்குகின்றன.
திருப்பதி ஹெலிகாப்டர் சேவை
ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சில நிமிடங்களில் திருமலை மலை உச்சியில் தரையிறங்கும் இந்த சேவையின் கட்டணம் ₹2500 முதல் ₹4000 வரை இருக்கிறது. இது திருப்பதி தேவஸ்தானம் அல்லது தனியார் இணையதளங்களின் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சுற்றி உள்ள இடங்கள் , கோவில்களை வைகை நதி எல்லாவற்றையும் வானில் இருந்து பார்க்கலாம். இந்த ஏரியல் விமானப்பயணங்களின் நேரம் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கும், கட்டணம் ₹5000 முதல் இருக்கும்
ராமேஸ்வரம்
பாம்பன் பாலம், கடற்கரைகள் போன்ற இடங்களை மேல் நோக்கில் காணலாம். இந்த ஏரியல் விமானப்பயணங்களின் நேரம் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கும், கட்டணம் ₹5000 முதல் ₹15,000 வரை இருக்கலாம்.
கர்நாடகாவில்,
கூர்க் (Coorg), சிக்கமகளூர் (Chikmagalur) ஆகிய பசுமை மலை பகுதிகளை காணும் ஹெலிகாப்டர் சேவைகள் பெங்களூரு அல்லது மைசூர் நகரங்களைத் துவக்கமாக கொண்டு இயங்குகின்றன. இந்த பயணங்கள் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை இருக்கும்
Related stories
ஊட்டி , கொடைக்கானல்
கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற ஹில்ல்ஸ்டேஷன்களிலும், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) தற்காலிகமாக ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை பொதுவாக 15 முதல் 25 நிமிடங்கள் வரை அழைத்து செல்லும்
கேரளா
மூணார், தேக்கடி மற்றும் ஆலப்புழா பகுதிகளில், தேயிலைத் தோட்டங்கள், காட்டுப் பாதைகள் மற்றும் கானால்கள் போன்ற இடங்களை மேலிருந்து காண ஏரியல் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. கோச்சி விமான நிலையத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர் பயணங்கள் தொடங்குகின்றன, கட்டணம் ₹8000 முதல் ₹18,000 வரை இருக்கும்
இந்த சேவைகள் பெரும்பாலும்
ஆன்மீக யாத்திரைகள், மேல் பார்வை சுற்றுலா (ஏரியல் டூர்), திருமண நிகழ்வுகள் மற்றும் V.I.P தரிசனம் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றன. வானிலை மற்றும் அரசு அனுமதி காரணமாக சேவைகள் இடையே நிறுத்தங்கள் ஏற்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
முன்பதிவு
இவை அனைத்தும் முன்பதிவு செய்துகொண்டு செல்வதாக இருக்கும். முன்னமே பார்த்து புக்கிங் செய்து கொள்ளுங்கள்